'நிச்சயம் தான் முடிஞ்சு போச்சுல'... 'சந்தடி சாக்கில் மாப்பிள்ளை செஞ்ச பகீர் சம்பவம்'... பெண் வீட்டாருக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலன். இவருக்கும் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் முன்னிலையில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் முடிந்த நிலையில், இருவரும் தங்களின் மொபைல் எண்ணைப் பரிமாறிக்கொண்டார்கள்.

இருவரும் செல்போனில் ஆசையாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில், தனிமையிலும் சந்திக்க முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், கலைச்செல்வி கர்ப்பமாகியுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பாராத அவர், இதுகுறித்து வடிவேலனிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ந்து வடிவேலன் அதிர்ந்து போன நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது திருமணம் தடைப்படும் அளவிற்குக் கொண்டு சென்று விட்டது.
திருமணம் நின்றதால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் பெற்றோர், வடிவேலனின் உறவினர்களிடம் பேசி பார்த்தார்கள். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டாததால், மணப்பெண் கலைச்செல்வி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வடிவேலனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
