பாம்பின் வயிற்றிற்குள் 'பிளாஸ்டிக்' பாட்டில்... உயிர்போகும் வேதனையில் 'தவிப்பு'... படாத பாடு பட்டு வெளியே கக்கிய 'நேரடிக் காட்சி'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 10, 2020 03:35 PM

பாம்பு ஒன்று பசிக்கொடுமையில் பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கிவிட்டு படாடதபாடு பட்டு வெளியே கக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

A snake who swallows a plastic bottle and Pushed out

பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகும் என எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கோடிக்கணக்கான டன் பிளாஸ்டிக் பொருட்கள் நிலமெங்கும் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன.

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால், கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும், நிலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக்  குப்பைகள் அகற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், யாரோ ஒருவர் குடித்துவிட்டு தூக்கி எரிந்த கூல்டிரிங் பாட்டிலை பாம்பு ஒன்று விழுங்கி விட்டு, அதனை செரிக்க முடியாமல் படாதபாடு பட்டு, மீண்டும் வெளியே தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிளாஸ்டிக்தானே என நாம் தூக்கி எரியும் ஒரு பொருள் ஏதும் அறியாத உயிரினங்களை எவ்வளவு பாடாய் படுத்துகிறது என்பதை இதைப் பார்த்த பின்பாவது நாம் உணர வேண்டும் என்பதே இந்த வீடியோவின் நோக்கமாகும்.

Tags : #SNAKE #SWALLOW #PLASTIC #PUSHED OUT