‘முதல்வர் வேட்பாளர் பழனிசாமி’!.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 09, 2021 03:04 PM

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

AIADMK general council approves EPS as party\'s CM candidate

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. அதன்படி, முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றம்.

2. ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

3. கூட்டணி குறித்து முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்.

4. கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

5. அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

6. தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

7. தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம்.

8. உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, வேலை வாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

9. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

10. இலங்கையில் மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.

11. நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

12. கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்.

13. 7.5% இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவமனையில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றிருப்பதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

14. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.

15. டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு.

16. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. AIADMK general council approves EPS as party's CM candidate | Tamil Nadu News.