'தொலைந்து 53 வருடங்களுக்கு பிறகு கிடைத்த பர்ஸ்'... ஆசையாக திறந்தபோது காத்திருந்த ஆச்சரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கலிஃபோர்னியாவின் சான் டியாகோ என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பால் க்ரிஷம் (Paul Grisham). 91 வயதாகும் இவர், கடந்த 1967 ஆம் ஆண்டின் போது அர்ஜென்டினாவிலுள்ள அமெரிக்க கடற்படையில் வானிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பாலின் பர்ஸ் தொலைந்து போயுள்ளது.
இந்நிலையில், சுமார் 53 ஆண்டுகளுக்கு பிறகு தொலைந்து போன பால் க்ரிஷமின் பர்ஸ், அர்ஜென்டினாவில் கட்டிடம் ஒன்றை இடிக்கும் போது அதனருகே கிடைத்துள்ளது. பால் க்ரிஷமின் பர்ஸிற்குள் அவரின் கடற்படை ஐ.டி, அவரது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மேலும் சில பொருட்களும் இருந்தது. மற்றபடி, பணம் எதுவும் இல்லை. இதனுடன் இன்னொரு பரிசும் அதனருகே கிடைத்துள்ளது.
இந்த இரண்டு பர்ஸின் உரிமையாளர்களையும் ஸ்டீபன் என்பவர் கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார். அதன்படி, கலிஃபோர்னியாவில் இருந்த பால் க்ரிஷமை கண்டுபிடித்து, அவரைத் தொடர்பு கொண்டு பர்ஸ் கிடைத்த தகவலைத் தெரிவித்துள்ளார். 53 ஆண்டுகளுக்கு பிறகு பர்ஸ் மீண்டும் கிடைத்ததால் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன பால் க்ரிஷம், அதனுள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சில பொருட்கள் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். அர்ஜென்டினாவில் 13 மாதங்கள் தான் பணிபுரிந்தது, தனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகும் என பால் க்ரிஷம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மற்றொரு பர்ஸின் உரிமையாளர் பெயர் பால் ஹோவர்ட் என்பதும், அவர் கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. அந்த பர்ஸைப் பெற்றுக் கொண்ட பால் ஹோவர்டின் குடும்பத்தினர், அதனை மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவும் உணர்ந்ததாக கூறப்படுகிறது.