'நான் முதலமைச்சர் ஆனது... இப்படி தான்!' - 2017 சம்பவம் குறித்து... போட்டுடைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'தி இந்து' ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், என்னை முதலமைச்சராக தேர்வு செய்தது சசிகலா அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனினாமி, 2017, பிப்ரவரியில் நிலவிய நெருக்கடி நிலைமை உங்களுக்குத் தெரியும்.
அந்த சூழ்நிலையில், பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தன்னை விரும்பினார்கள் என்றும், அதனால் தான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா தன் மீது நல்ல நம்பிக்கை வைத்திருப்பதை அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அறிந்திருந்தனர் என்றும் கட்சி விவகாரங்களைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ் காட்டிய எதிர்ப்பு போக்கு காரணமாக, முதல்வர் பதவிக்கு தன்னை சசிகலா தெரிவுசெய்ததாக கூறப்படுவதை எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
