முதல் ‘ப்ளான்’ சொதப்பிருச்சு.. உடனே அடுத்த திட்டத்தை தீட்டிய கும்பல்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி இழுத்துச்சென்று கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் நகரில் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்குள் காவலாளி இல்லாத சமயம் பார்த்து நுழைந்த கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அதற்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயன்றபோது, எங்கே சத்தம் கேட்டுவிடுமோ என அச்சத்தில் இயந்திரத்தை கயிறு கட்டி காரில் இழுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏடிஎம் இயந்திரத்தைக் கொண்டுச் சென்று, அதை உடைத்து அதிலிருந்த ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதற்கிடையே ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் இயந்திரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்துக்குள் பொருத்துப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், 4 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
முன்னதாக நகைக்கடை ஒன்றில் இந்த கும்பல் கொள்ளையடிக்க முயன்று தோல்வியடையவே, ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.