சாவி தொலைஞ்சு போச்சு, இப்போ என்ன பண்றது...? 'திடீரென அதிகமான மூச்சுத்திணறல், கடைசியில்...' அவசர சிகிச்சை பிரிவின் சாவி தொலைந்ததால் நடந்த சோக நிகழ்வு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 06, 2020 11:09 AM

அவர சிகிச்சை பிரிவின் சாவி தொலைந்ததால் 55 வயதான பெண் ஒருவர் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Woman dies after missing key of emergency department

மத்தியபிரதேச மாநிலத்தில் 55 வயதுடைய பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உறவினர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று கொரோனா சோதனைக்காக அவரது ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டன. அதையடுத்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பதற்றம் அடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால் தீவிர சிகிச்சை பிரிவு கதவின் சாவியை தேடுவதில் ஊழியர்கள் நீண்ட நேரம் செலவிட்டுள்ளனர். இதன்காரணமாக மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மூச்சு திணறல் அதிகரித்து உள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முயன்றனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே 55 வயதான பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவர்களின் உறவினர்களை பெரிதும் சோகத்தில் ஆழுத்தியுள்ளது.