‘10 பேருக்காவது கால் பண்ணுங்க’.. ‘அவங்கள வீட்ல இருக்க சொல்லுங்க’.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க முதல்வர் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலர் நோய் தொற்றின் வீரியம் தெரியாமல் வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர், ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் தன் கடைமையை செய்யும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரொனா பரவலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘உங்கள் உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், தெரிந்தவர்கள் என 10 நபர்களையேனும் தொலைபேசியில் அழையுங்கள். உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துங்கள். அவர்கள் வெளியே சென்றால் சமுதாயத்திற்கு எவ்வளவு பாதிப்பு நேரிடும் என்பதையும் உணர்த்துங்கள். வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள். தற்போதைய சூழலில் வீட்டிலிருப்பது நம் அனைவரின் தலையாய கடைமை’ என பதிவிடப்பட்டுள்ளார்.
விழித்திரு!
விலகி இரு!!
வீட்டில் இரு!!!#TNAgainstCorona pic.twitter.com/MrqZSHqmRY
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 3, 2020