மேலும் '102 பேருக்கு' பாதிப்பு... 'தமிழகத்தில்' கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்... 'மொத்த' எண்ணிக்கை இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 03, 2020 06:02 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்று 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus Positive Cases in Tamil Nadu rise to 411

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுக்க மத்திய,மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.