கொரோனா ஊரடங்கால் ‘குவியும் ஆர்டர்கள்’.. 10,000 பேரை வேலைக்கு எடுக்கும் ‘பிரபல’ நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் பிக்பாஸ்கட் நிறுவனம் புதிதாக 10,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நகரங்களில் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் ஆன்லைன் சேவையை பெரிதும் உபயோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்கும் பிரபல நிறுவனமான பிக்பாஸ்கட் (BigBasket) புதிதாக 10,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது அதிக ஆர்டர்கள் வருவதால் அதனை சமாளிக்க புதிதாக ஆள்களை வேலைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் கிட்டங்கி மற்றும் ஹோம் டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிக்பாஸ்கட் சேவை நடக்கும் 26 நகரங்களில் இதற்கான ஆள் எடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.