'கொரோனா வந்தாலும் வந்துச்சு'...'வேலையில்லா இளைஞர்களுக்கு வந்த வாய்ப்பு'... தமிழக அரசு முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், வேலையில்லா இளைஞர்களுக்கு அதில் வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் நோய் பாதிப்பு மற்றும் கொரோனா அறிகுறி தொடர்பாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்களும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சென்னையில் இன்னும் கணக்கெடுக்கும் பணி முழுமையாக. முடிவடையவில்லை
இதையடுத்து வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுயஉதவிக்குழுவில் இடம் பெற்றுள்ள பெண்களை ஈடுபடுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சுயஉதவிக்குழுவில் உள்ளதால் அவர்கள் உணவக பணி முடிந்ததும் இந்த வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தவும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களையும் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு சம்பளமாக ரூ.15,500 கொடுக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்டுபிடித்து பரவலை விரைந்து கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.