மூடப்பட்ட 'ஆட்டிறைச்சி' கடைகள்... சிக்கனுக்கு வந்த 'திடீர்' கிராக்கி... வெலைய பார்த்தாலே 'ஷாக்' அடிக்குதே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஆட்டிறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது கோழிக்கறி, மீன், முட்டை ஆகியவற்றின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் சுமார் 500-க்கும் ஆட்டிறைச்சி கடைகள் மூடப்பட்டு இருப்பதால் அங்கு கோழிக்கறி மற்றும் மீனின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மீனின் விலை ரூபாய் 50 முதல் 100 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதேபோல கோழிக்கறி 200 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. முட்டை ரூபாய் 3.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக ஆட்டிறைச்சி கடைகளில் கூட்டம் குவிந்ததால் ஆட்டிறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் இன்று மதுரை இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் இறைச்சி வாங்கி சென்றனர். இதேபோல மீன் கடைகளிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.