‘அதிலிருந்து எல்லாம் கொரோனா பரவாது’... ‘அதற்கு ஆதாரம் இல்ல’... 'சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 03, 2020 04:02 PM

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வளர்ப்பு பிராணிகளை கைவிடுவதை நிறுத்த வேண்டும் என் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Chennai Corporation said that there is no evidence of corona spread

கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று வளர்ப்பு பிராணிகளில் இருந்து பரவி விடுமோ என்ற அச்சத்தால் அதனை கைவிடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து,  ‘கொரோனா வைரஸ் தொற்று வளர்ப்பு பிராணிகளில் இருந்து  பரவ எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதனால் வளர்ப்பு பிராணிகளை யாரும் கைவிட வேண்டாம்’ என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONAVIRUS #CORONA #CHENNAI #CORPORATION