‘ரெட்டைக் குழந்தைகளுக்கு‘ வைக்கப்பட்ட ‘செம்ம டைமிங்’ பெயர்கள்.. ‘தரமான’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கரில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோவிட் மற்றும் கொரோனா என்று அவரது பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ள சம்பவம் வைரல் ஆகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு லாக்டவுன் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெயர் சூட்டிய சம்பவம் வைரல் ஆகியது. இதனையடுத்து அதே மாநிலத்தைச் சேர்ந்த ப்ரீத்தி வர்மா, தனது கணவருடன் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணி நிமித்தமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் புதிதாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். எனினும் இந்த சூழலை நினைவுபடுத்திக் கொள்ளும் விதமாக இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என்று பெயர் சூட்டியுள்ளார்.
இவர்களுள் பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுபற்றி ப்ரீத்தி வர்மா கூறுகையில் நிறைமாத கர்ப்பிணியான தான், ஊரடங்கு உத்தரவால் குழந்தை பிறக்கும் தருவாயில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியதாகவும், பின்னாளில் குழந்தைகளின் பெயர்களை மாற்ற நினைத்தால் மாற்றிக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
