VIDEO: ‘கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கைகலப்பு’!.. ‘வாழ்நாள் தடை விதிக்கணும்’!.. கொதித்த கம்பீர்..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 30, 2019 01:22 PM

டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் சங்க பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

After Fist Fight Gautam Gambhir urges BCCI to dissolve DDCA

டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற இயக்குநர்களை மீண்டும் நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகளுக்கு வாழ்நாள் தடை விதித்து, டெல்லி கிரிக்கெட் சங்கம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.