19 ரன்னுல அவுட்.. ஷ்ஷ்.. பேசவே கூடாது.. 'கடுப்பேற்றிய' வீரர்.. தொடரும் பகை.. வச்சு 'செய்ய' காத்திருக்கும் கோலி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 10, 2019 04:03 PM
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட கோலி, காற்றில் நோட்புக்கில் எழுதுவது போல சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதைத்தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 170 ரன்கள் எடுத்து. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது கோலி 19 ரன்களில் அவுட் ஆனார். அவரின் விக்கெட்டை வீழ்த்திய வில்லியம்ஸ் ஷ்ஷ் பேசவே கூடாது, என வாயில் விரல் வைத்து சைகையால் கடுப்பேற்றினார். இதனால் இந்த மோதல் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவத்திற்கு முதல் போட்டியில் கணக்கு தீர்த்த கோலி, நாளை நடக்கப்போகும் போட்டியில் வில்லியம்ஸின் செயலுக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டி20 தொடரில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் தற்போது 1-1 என சமநிலை வகிக்கின்றன. இதனால் நாளை நடக்கப்போகும் போட்டியில் யார் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
