'எனக்கு இவ்ளோதான் மட்டனா?'.. ஆத்திரத்தில் 'மனைவிக்கு கணவன்' கொடுத்த 'கொடூர' தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 18, 2019 07:11 PM

மும்பையில் குறைவான மட்டனை சப்ளை செய்ததால், 39 வயது மதிக்கத்தக்க பெண்ணை, அப்பெண்ணின் கணவர் எரித்துள்ள சம்பவம் கிடுகிடுக்க வைத்துள்ளது.

husband burns wife alive for serving less mutton in dinner

ஜூயி கோமதே என்கிற கிராமத்தில் தினக்கூலி வேலையை செய்யும் 38 வயதான மாருதி சரோத் மற்றும் அவரது மனைவியான 37 வயதாகும் பல்லவி சரோத் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் தனது கணவருக்கு பல்லவி சரோத் இரவு உணவு பரிமாறியுள்ளார்.

அப்போது குறைவான அளவில் மட்டன் இருந்ததாக கோபப்பட்ட மாருதி சரோத் கொதித்து எழுந்துள்ளார். உடனே மண்ணெண்ணெயை ஊற்றி மனைவி என்றும் பாராமல் கொளுத்தியுள்ளார். இதனால் மருத்துவமனையில் பல்லவி சரோத் உயிருக்கு போராடி வருகிறார்.

Tags : #MUMBAI #MUTTON