'பிரபல' கிரிக்கெட் வீரரின் 'திருமணத்தில்'... ஸ்மார்ட் போன்கள் 'திருட்டால்' திடீர் மோதல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 28, 2020 07:47 PM

பிரபல கிரிக்கெட் வீரரும், வங்கதேச ஆல்ரவுண்டருமான் சவுமியா சர்க்கார் கடந்த புதன்கிழமை (26) திருமணம் செய்து கொண்டார். 27 வயதான சவுமியா சர்க்கார் 19 வயதான பிரியோந்தி தீப்நாத் பூஜா என்ற பெண்ணை குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கரம் பிடித்தார்.

Smartphone\'s Stolen in Cricket Player Soumya Sarkar\'s Marriage

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண நிகழ்ச்சியின் இடையே செல்போன் திருட்டால் திடீர் மோதல் ஏற்பட்டது. சவுமியா சர்க்காரின் தந்தையின் மொபைல் போன் உட்பட மொத்தம் 7 பேரின் மொபைல் போன்கள் திருடு போயுள்ளன. இதையடுத்து அங்கிருந்த நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சிலபேரை பிடித்து விசாரிக்க, அவர்கள் திருமணத்திற்கு வந்த உறவினர்களை தாக்கி உள்ளனர்.

இதையடுத்து அங்கு திடீர் மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த இடமே பரபரப்பாக காட்சியளித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்போன்களை மீட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மொபைல் போன்களை திருடியவர்கள் கைது செய்யப்பட்டார்களா? இல்லையா? என்ற விவரம் வெளியாகவில்லை.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சவுமியா 3 விதமான போட்டிகளிலும், இதுவரை 3000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆல்ரவுண்டரான இவர் இதுவரை 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.