‘சேர்ந்தே இருப்பது கூட்டமும் தி.நகரும்’.. ‘பிரிச்சு வெச்சது கொரோனாவும் அச்சுறுத்தலும்’.. பரபரப்பு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில் சென்னையில் சுமார் 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், சென்னையில் ஒரு மருத்துவக் குழு தினந்தோறும் 80 வீடுகளையாவது கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் எனவும், சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் 1913 என்கிற எண்ணை அழைக்கவும் அவர் கூறியுள்ளார். தவிர சென்னை தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும், சிறிய கடைகள் திறந்திருக்கும் என்றும் அதே சமயம் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ கல்லூரிகளைத் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களையும் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள், திரை அரங்குகள், பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா எதிரொலி காரணமாக சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
