‘அடுத்த 2 நாட்கள்’... '16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு'... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 02, 2019 08:52 PM
தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு, கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதேபோல் தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரை பொறுத்தவரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.