'உலகத்திலேயே இதுதான் முதல்முறை’.. ஆர்வம் காட்டிய மக்களால் அசத்திய தேர்தல் ஆணையம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 22, 2019 12:20 AM

உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடியை அமைத்து இந்திய தேர்தல் ஆணையம் சாதனை படைத்துள்ளது.

Lok Sabha Election 2019: World\'s highest polling station

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதனை அடுத்து நாளை(23.05.2019) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியை அமைத்து தேர்தல் ஆணையம் அமைத்து அசத்தியுள்ளது.

இமாசல பிசதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15 ஆயிரம் அடி உயரம் உள்ள தாஷிங் என்ற இமயமலை கிராமத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குசாவடியை அமைத்து தேர்தல் நடத்தியுள்ளது. மொத்தம் 49 வாக்களர்கள் கொண்ட இந்த கிராமத்தில் 36 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மேலும் இங்கு தேர்தல் பணிக்கு வந்த அதிகாரிகளும் இந்த வாக்குச்சாவடியிலேயே வாக்களத்துள்ளனர். இதன்மூலம் உலகில் மிக உயரமான வாக்குச்சாவடியை அமைத்த சாதனையை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.