பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கு.. ஜாமீனில் எடுத்த தந்தையை கொன்ற மகன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 23, 2019 04:41 PM

திருவண்ணாமலை அருகே ஜாமீனில் எடுத்த தந்தையின் தலையை வெட்டி, கொடூரமாக மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

son was out on bail cut off his father head in thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபால், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவரது மகன் கார்த்திகேயனுக்கும், மருமகள் ராஜேஸ்வரிக்கும் திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு குழந்தை பிறந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், தனது 3 மாத பச்சிளம் குழந்தையை 3 துண்டுகளாக வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிறைக்கு சென்ற அவர், 10 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த, தனது தந்தையின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த கார்த்திகேயன், வாணபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஜாமீனில் எடுத்த தந்தையையே, மகன் கொலை செய்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : #MURDER #SON #THIRUVANNAMALAI #FATHER #BAIL