இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Oct 21, 2019 11:19 AM
1. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை என வங்கதேச வீரர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
2. அதிக கனமழை காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
4. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதேபோல புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
5. 3வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நிறைவு.தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து, இந்திய அணியைவிட 203 ரன்கள் பின் தங்கியுள்ளது.
6. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
7. மழைக்காக தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது; 450க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டி உள்ளது என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
8. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
10. சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் : சிரியாவின் வடகிழக்கு பகுதியில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி சிரியா வீரர்கள் தற்காலிகமாக தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர்.