“நான் முதல் பெண் அல்ல.!”.. வெற்றி உறுதியானதும் கமலா ஹாரிஸின் முதல் போன் கால்!.. பரவி வரும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜனநாயக கட்சியை சார்பில் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள், அதே சமயம் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார். இதன் மூலம் தெற்காசியாவைச் சேர்ந்த அமெரிக்காவின் பெண் துணை அதிபர் என்கிற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “ஜனநாயகத்தைக் காப்பாற்றி, பெருவாரியாக வாக்களித்த மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அன்பே எனது வெற்றிக்குக் காரணம். கணவர் உள்பட என் குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் நன்றி.
இந்த தருணத்தில் நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வந்த எனது தாயை நினைவு கூர்கிறேன். துணை அதிபராகத் தேர்வாகியுள்ள முதல் பெண் நான். கடைசிப் பெண் அல்ல. இது ஆரம்பம் தான். இனவெறியை அகற்றுவோம் என உறுதிப்படக் கூறுகிறேன்” என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.
முன்னதாக பைடன் 279 தேர்தல் வாக்குகளையும் டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளையும் பெற்று ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், துணை அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கும் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுடன் தொலைபேசியில் தேர்தல் “நாம சாதிச்சிட்டோம்,
We did it, @JoeBiden. pic.twitter.com/oCgeylsjB4
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
நீங்க அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் போறீங்க” எனக் கூறிய உரையாடல் வீடியோவை கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.