‘உங்க வீட்ல புதையல் இருக்கு’! ‘ஜோசியர் பேச்சை கேட்டு வீட்டுக்குள் 20 அடி குழி’.. பரபரப்பை ஏற்படுத்திய ஐஸ் வியாபாரி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 11, 2019 03:35 PM

புதையல் இருப்பதாக ஜோசியர் கூறியதைக் கேட்டு ஐஸ் வியாபாரி வீட்டுக்குள் குழி தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tiruvallur man digged 20 feet pit in there house for treasure

திருவள்ளூர் மாவட்டம் கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் அப்பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டிக்குள் 25 அடி ஆழத்தில் புதையல் இருப்பதாக ஜோசியர் ஒருவர் மோகனிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மோகன் வீட்டுக்குள் 20 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக மோகனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஜோசியர் ஒருவர் தன்னுடைய வீட்டில் புதையல் இருப்பதாக கூறியதன் பேரில் குழி தோண்டியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணலை கொண்டே குழியை அதிகாரிகள் மூடியுள்ளனர். மேலும் இதுபோன்று புதையல் தோண்டும் பணியில் ஈடுப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Tags : #TIRUVALLUR #TRESSURE #HOUSE #PIT