மனைவி வீட்டுக்குள் வைத்துப் பூட்டியும் கேட்காமல்.. 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய கணவர்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 20, 2019 03:29 PM

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் வீட்டின் அருகில் வசிப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai man attacks drunk neighbours with acid

சம்பவத்தன்று, வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வரும் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி. எஸ்.வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் மொட்டை மாடியில் மது அருந்தியுள்ளனர். மூன்றாவது மாடியில் மனைவி ரஞ்சனி மற்றும் அவரது அண்ணன் பாஸ்கருடன் வசித்து வரும் கன்னியப்பன், குடித்துவிட்டு சத்தம் போடுவதாக அவர்களைக் கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சண்டை பெரிதாகாமல் தடுக்க கணவரையும், அண்ணனையும் ரஞ்சனி வீட்டிற்குள் வைத்துப் பூட்டியுள்ளார். வீட்டிற்கு வெளியே எதிர்த் தரப்பினர் உருட்டுக் கட்டையுடன் பிரச்சனை செய்ய, கன்னியப்பன் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவர் வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய உபயோகிக்கும் ஆசிட்டை எடுத்து அவர்கள்மீது ஊற்றியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஆசிட் பட்டதும் அலறித் துடித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

டாக்டர் கூறுகையில், “அழகுமுத்து என்பவரது வலது கண்ணிலும், கருப்பசாமி என்பவரது இடது கண்ணிலும் ஆசிட்டால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 8 பேரும் நலமாக உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

Tags : #CHENNAI #ACIDATTACK