'கோவத்துல அம்பயரை திட்டிட்டேன்'... 'அப்படி பேசுனது தப்புதான்'... 'சாரி சொன்ன வைரல் சிறுவன்!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | May 17, 2019 10:56 AM

ஹைதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில், கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது.

 

csk viral boy apology for shouting 3rd umpire

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கடந்த 12-ம் தேதி களம் கண்டன. போட்டியில் கேப்டன் தோனி, ரன் அவுட் ஆனார். ஆனால் தோனியின் விக்கெட்டை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 3-வது நடுவர் தோனிக்கு அவுட் வழங்கினார். அப்போது கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை அணி கோப்பையை வென்றது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தோனி அவுட் ஆனதால் சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதில், அந்தச் சிறுவன் 'தோனி அவுட் இல்லை என்றும் அவுட் கொடுத்த 3-வது நடுவர் தூக்கில் தொங்குவார்' எனவும் கூறி கதறி அழுதான். இந்நிலையில் அந்தச் சிறுவன் தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளான். இதுதொடர்பாக பேசிய  சிறுவன் 'என்னுடையப் பெயர் கிருதிகேஷ். அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 8 -ம் வகுப்பு படிக்கிறேன்.

நான் தான் 3-வது நடுவரை திட்டி அழுதது. அவ்வாறு திட்டியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் தோனி மீது உள்ள பாசத்தினால் திட்டிட்டேன். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எனக்கு ரொம்ப பிடிக்கும். தோனியை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்' என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

Tags : #IPL2019 #CSK #CHENNAI #VIRALBOY