"இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்".. பைக்கில் போன காதல் ஜோடி.. நள்ளிரவில் மோதிய லாரியால் நேர்ந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிலோனா. இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவரது உறவினரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத். குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் இன்ஜினியராகவும் வேலை பார்த்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பாபிலோனா மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பதால் பழகி வந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில், நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே காதலாகவும் மாறி உள்ளது.
அது மட்டுமில்லாமல் இருவருக்கும் இடையே உருவான காதலுக்கு அவர்களது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடத்தவும் இருவரது வீட்டிலும் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர், மண்டபம் பார்த்தல், ஆடைகள் வாங்குதல் உள்ளிட்ட வேலைகளிலும் இரு வீட்டாரும் மும்முரம் காட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரு சில தினங்கள் முன்பாக அண்ணா நகர் பகுதியில் உள்ள மால் ஒன்றில் பாபிலோனா மற்றும் பிரசாத் ஆகியோர் ஒன்றாக சினிமா பார்த்து விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அசம்பாவித சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து இரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று, பிரசாத் மற்றும் பாபிலோனா ஆகியோர் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாபிலோனா மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே லாரிக்கு இடையே சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த விபத்தால் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பித்து ஓட நினைத்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை பிடித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட, பிரசாத் மற்றும் பாபிலோனா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.

மற்ற செய்திகள்
