நண்பருக்கு பெண் பாக்க போன இடத்தில்.. 78 வயது முதியவருக்கு மலர்ந்த காதல்.. திருமணத்தில் முடிந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநண்பருக்கு பெண் பார்க்க போன இடத்தில் 78 முதியவருக்கு காதல் உருவாகி பின்னர் கல்யாணத்தில் முடிந்துள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோமன் நாயர். இவருக்கு தற்போது 78 வயதாகிறது. விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சோமன் நாயருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
இதனிடையே, சமீபத்தில் தனது 65 வயது நண்பர் ஒருவருக்கு பெண் பார்க்கவும் சோமன் நாயர் உடன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தான் பீனா குமரி என்ற வயதான பெண்மணியையும் சோமன் சந்தித்துள்ளார். பீனா குமாரிக்கு ஒரே ஒரு மகள் உள்ள நிலையில், அவர் கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தனது கணவனை இழந்த பீனா குமாரி, மகள் வெளிநாட்டில் உள்ள காரணத்தினால் தற்போது தனியாக தான் வசித்து வருகிறார். பீனா குமாரியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன நிலையில், சோமன் நாயரின் மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, பீனா குமாரியின் சகோதரர் பிரவீன், சகோதரியின் மறுமணத்திற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட பிறகும் அவை தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில், நண்பருக்காக பீனா குமாரியை பார்க்க போனதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், சோமன் நாயருக்கு பீனா மீது விருப்பம் உருவானதாக சொல்லப்படுகிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் விருப்பம் கொண்டதை அடுத்து, இதனை பேசி முடித்த பின்னர் அவர்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.
இரு வீட்டாரும் இதற்கு ஒப்புக் கொண்ட நிலையில், சமீபத்தில் மகள்கள், மருமகன் உள்ளிட்டோர் முன்னிலையில் சோமன் நாயர் - பீனா குமாரி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
