"நைட் 9 மணிவரை போன் பண்ண கூடாது.!" மணப்பெண்ணிடம் இப்படி ஒரு அக்ரீமெண்ட் எழுதி வாங்கிய மாப்பிள்ளையின் நண்பர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் திருமணத்திற்கு பிறகு கணவரை தங்களுடன் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் காண்ட்ராக்டில் மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கி இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வித்தியாசமான திருமண கண்டிஷன் பத்திரத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக திருமணத்திற்கு முன்னர் நண்பர்களோடு இரவு நேரங்களில் கூட வெளியே சுற்றலாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு பலரது வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிவிடும். இதனை தடுக்க நினைத்த மாப்பிள்ளை ஒருவருடைய நண்பர்கள் செய்த காரியம் தான் பலரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரகு. இவருக்கும் அர்ச்சனா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது. கல்யாண மாப்பிள்ளை ரகு, கஞ்சிக்கோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அர்ச்சனா வங்கி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், ரகுவின் நண்பர்கள் தான் இப்படியான வினோத ஒப்பந்தத்தில் மணமக்கள் அர்ச்சனாவிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.
இரவு 9 மணி வரை தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட தனது கணவரை அனுமதிப்பதாகவும் அந்த நேரத்தில் அழைக்க கூடாது என்றும் மணமகளிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள் மாப்பிள்ளை ரகுவின் நண்பர்கள். ரூ.50 ஸ்டாம்ப் பேப்பரில் இந்த அக்ரீமெண்ட் எழுதப்பட்டிருக்கிறது.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஒப்பந்தத்தில்,"திருமணத்திற்குப் பிறகும் என் கணவர் ரகு, இரவு 9 மணி வரை தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுவார். அந்த நேரத்தில் நான் அவரை தொலைபேசியில் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மணமகளான அர்ச்சனா கையெழுத்து போட்டிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் சாட்சிக்கு இருவரும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.
நவம்பர் 5-ம் தேதி பாலக்காட்டின் அருகே உள்ள கஞ்சிக்கோட்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரகுவின் நண்பர்கள் அந்த ஒப்பந்த பத்திரத்தை மணமகளுக்கு பரிசாக வழங்கினர். அதை அவர்கள் சமூக ஊடகங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
