பொண்ணுக்கு 72, பையனுக்கு 78.. 😍.. கல்யாணம் எங்க வெச்சு நடந்தது தெரியுமா..?.. வைரல் LOVE ஸ்டோரி!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, இரு மனதுக்கு இடையே உருவாகும் காதலுக்கு பணமோ, அந்தஸ்தோ, வயதோ, ஜாதி மதமோ என எந்த ஒரு தடையும் இருக்காது.

ஒருவருக்கு எப்போது எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் காதல் உருவாகலாம் என்பது எழுதப்படாத கோட்பாடு.
அப்படி ஒரு சூழலில், 78 வயதான டென்னிஸ் என்ற நபரும், 72 வயதாகும் ப்ரெண்டா வில்லியம்ஸ் என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அதன் பின்னால் உள்ள பல சுவாரஸ்ய சம்பவங்கள, தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
அமெரிக்காவின் Arizona என்னும் பகுதியை சேர்ந்த டென்னிஸ் மற்றும் ப்ரெண்டா வில்லியம்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஒருவரை ஒருவர் முதல் முதலாக சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில் சில உரையாடல்கள் மூலம் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாக அதன் பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ள நிலையில், நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலும் உருவாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்த நிலையில், திருமணம் செய்ய அவர் தேர்வு செய்த இடம் தான் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இருவரும் முதல் முறையாக எந்த சூப்பர் மார்கெட்டில் சந்தித்தார்களோ அதே இடத்தில் வைத்து தங்களின் காதலையும் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தான், தங்களின் திருமணத்தையும் அதே சூப்பர் மார்க்கெட்டில் வைத்து நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சமீபத்தில் டென்னிஸ் மற்றும் பிரண்டா வில்லியம்ஸ் ஆகியோரின் திருமணமும் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வைத்து நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
