'இது தான் 'கொரோனா குடை'யாம்!... அப்படி இதுல என்ன தான் இருக்கு!?'... பீகார் இளைஞரின் புது ஐடியா!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 04, 2020 12:02 PM

கொரோனா வைரஸில் இருந்து தப்ப பிஹார் மாநில இளைஞர் ஒரு புதிய குடை கண்டுபிடித்துள்ளார். தேசிய தொழில் ஆய்வுக் கவுன்சில்(சிஎஸ்ஐஆர்) அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.

bihar youth invents umbrella which he says resistant to covid19

உலகயே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்த தப்ப முதன்முறையாக இந்தியாவில் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமலாகி வருகிறது. ஏப்ரல் 14 வரை நீட்டித்து வந்தாலும் அந்நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

அவ்வாறு செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிஹாரில் கரோனா குடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தின் பர்தவுலியின் தேவ்ஹரா எனும் கிராமத்தின் வினித் குமார் தயாரித்துள்ளார்.

சாதாரணமாக மழைக்குப் பிடிக்கும் குடையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு அது உருவாகி உள்ளது. இதன் பொத்தானை அமுக்கியவுடன் குடை விரிந்து திறக்கிறது.

இத்துடன் குடையை சுற்றிலும் கால்வரை தொங்கியபடி பிளாஸ்டிக் காகிதம் விரிந்து விடும். அதேசமயம் குடையின் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டுவிடும்.

அதன் தேவை மேலும் வேண்டும்நிலையில் மற்றொரு முறை அதன் பொத்தானை அமுக்கி பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வினித் குமார் கூறும்போது, 'இந்த குடையை சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமையகத்தின் அங்கீகரத்திற்கு டெல்லி அனுப்பியுள்ளேன். இந்த தகவலை விவரித்து அந்நிறுவன அதிகாரிகளுக்கு மெயிலும் எழுதியுள்ளேன்' எனத் தெரிவித்தார்.

இதன் விலையை ரூ.300 என நிர்ணயித்துள்ள வினித் குமார், அவரது பகுதியில் இளம் விஞ்ஞானி என்று அழைக்கப்படுகிறார், இதற்கு முன் பிளாஸ்டிக்கில் வினித் பெட்ரோல் தயாரித்து அதுவும் ஆய்வில் இருப்பதாகக் கூறுகிறார்.