'கொரோனா தொற்று'...'யாரும் போக முடியாது'...'புரசைவாக்கம் உட்பட 8 முக்கிய இடங்களுக்கு ‘சீல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 04, 2020 12:39 PM

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள முக்கிய இடங்களான, புரசைவாக்கம் உள்பட 8 பகுதிகள் நேற்று மூடப்பட்டன. அந்த பகுதியில் இருந்து யாரும் உள்ளே செல்லவும், வெளியே வராத வகையிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Corona Virus : Chennai\'s Important places has be

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், அதனை தவிர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைதொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர், அவர் வசித்து வந்த பகுதியில் இரும்பு தடுப்புகளை அமைத்தனர். மேலும் அந்த நபர் இருக்கும் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதற்கிடையே புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, முத்தியால்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, புரசைவாக்கம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய 8 பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய் தொற்று யாருக்கும் பரவாமல் இருக்க, அந்த பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியில் வராமலும், யாரும் வெளியில் செல்லாத வகையிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருத்துவ உதவிக்கு மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மூடப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகளை தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு வாங்க வேண்டும்.