வீடு திரும்பும் வழியில் சென்னை கால் டாக்சி டிரைவருக்கு நடந்த கொடூரம்..! பீதியை கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 05, 2019 08:31 PM

சென்னையில் கால் டாக்சி ஓட்டுநரை தாக்கி வழிப்பறி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Call taxi driver attacked in Chennai

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் தமிழ்செல்வன் என்பவர் வேலையை முடித்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அரும்பாக்கம் அருகே இருவர் கால் டாக்சியை வழி மறித்துள்ளனர். பின்னர் இருவர் தமிழ்செல்வனை சவாரிக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் செல்போன் ஆப்பின் மூலம் பதிவு செய்தால் மட்டுமே சவாரிக்கு வர முடியும் என அவர்களிடம் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் செல்வனிடம் அந்த நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் திடீரென தமிழ் செல்வனை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.4000 பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கால் டாக்சி ஓட்டுநரிடம் வழிப்பறி நடந்த சம்பவம் சக ஓட்டுநர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Tags : #CHENNAI #CALL TAXI #DRIVER #ROBBED #THIEFS