legend updated

‘அடுத்த 2 நாள் சென்னைக்கு வாய்ப்பு இருக்கா?’... வானிலை மையம் புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 02, 2019 06:49 PM

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain may lashed in coastal districts in tamilnadu and andhra

ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை பொழிவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால், அடுத்த 2 வாரத்துக்கு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிராப் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags : #WEATHER #CHENNAI #RAIN