‘ரூ.10 -க்கு கேப் வசதி’.. ‘அசத்தும் சென்னை மெட்ரோ’.. புக் செய்வது எப்படி..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 06, 2019 06:42 PM
பயணிகளின் வருகையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ‘கேப்’ வசதியை புதிதாக தொடங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம், பெங்களூரு மெகாகேப்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கேப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பயணிகளின் வருகையை அதிகரிக்க தற்போது உள்ள ஊபர், ஓலா போன்ற கேப் வசதியைப் போல் மெட்ரோ நிர்வாகம் புதிய கேப் வசதியைக் கொண்டுவந்துள்ளது. இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அருகில் உள்ள நிறுத்ததை தேர்வு செய்ய வேண்டும். இதனை அடுத்து பயணிகள் இறங்கும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கே கேப் வந்து அவர்களை அழைத்து செல்கிறது. இந்த சேவை ரூ.10 வழங்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சண்முகம் நேற்று நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த கேப் வசதி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.