‘திருமணம் ஏன் அவசியமா?'... 'சென்னையில் தோனியின் அசத்தல் பேச்சு'... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 29, 2019 01:49 PM

காஷ்மீரில் ராணுவப் பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னர், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, திருமணத்தை பற்றி தோனி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Dhoni Speeches in Chennai Ahead of Joining in His Regiment

உலகக் கோப்பையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த இந்திய வீரர் தோனி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து தானே விலகினார். இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் ஆக இருக்கும் தோனி, அடுத்த இரண்டு மாதங்கள், தான் இராணுவத்தில் பணிபுரிய உள்ளதாக கூறினார். இதற்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்ததையடுத்து, வரும் 31-ம் தேதி முதல், ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் தோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடந்த பூஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி, திருமணத்தைப் பற்றி அசத்தலாகக் கூறிய வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘கல்யாணம் ஏன் தேவை என்றால், நீங்கள் ஐம்பது வயதை தாண்டும் போது, அது தான் உண்மையான காதலுக்கான நேரம். உங்கள் குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.

அப்போது தான் உங்களுக்கான நேரம் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டார். ஏற்கனவே தோனி காஷ்மீரில் ராணுவப் பயிற்சியில் சேர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியானநிலையில், அவர் வரும் 31-ம் தேதி முதல்தான் முழுமையாக பயிற்சியில் ஈடுபட உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை விமானநிலையத்தில் தோனி செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.