'ரெண்டு பொண்ணுங்க ஆடுனா தப்பா?'... 'சென்னை பப்'பில் நடந்த பரபரப்பு'... வைரலாகும் பெண்ணின் பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 01, 2019 12:08 PM

சென்னையில் உள்ள பிரபல பப்'பில் இருந்து இரண்டு பெண்கள் பௌன்சர்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவு வைரலாகி வருகிறது.

Girlfriends shown the door accuse city pub of homophobia

டெல்லியை சேர்ந்தவர் ஷிவானி சிங். கல்லூரி மாணவியான இவர், சென்னையை சேர்ந்த தனது தோழியான ராஸிகா கோபால கிருஷ்ணனை சந்திக்க சென்னை வந்துள்ளார். இதையடுத்து இருவரும் சென்னை காதர் நவாஸ்கான் சாலையிலுள்ள சிலேட் என்ற பப்'க்கு(The Slate) சென்றுள்ளார்கள். அங்கு சென்ற இருவரும் நடனமாடி கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு நடனமாடி கொண்டிருந்த மற்றோரு வாடிக்கையாளர்கள், இவர்கள் இருவரையும் முறைப்பது போன்று பார்த்துள்ளார்கள்.

இது ஷிவானிக்கும், ராஸிகாவிற்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இருவரும் கழிவறைக்கு செல்ல, அவர்களை தொடர்ந்து வந்த பௌன்சர்கள் ''உங்கள் இருவரின் நடவடிக்கையும் சரியில்லை, உடனே பப்பை விட்டு வெளியேறுங்கள் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது இருவருக்கும் அதிர்ச்சியை அளிக்க உடனே இருவரும் வெளியேறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ஷிவானி சிங் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரு பெண்களுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஷிவானியின் முகநூல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #FACEBOOK #SHIVANGI SINGH #RASIKA GOPALAKRISHNAN #CHENNAI #KHADER NAWAZ KHAN ROAD #THE SLATE HOTEL