”திடீர்ன்னு அவ ஞாபகம் வந்துருச்சு... அதனால தான்...” - 'மிட்நைட்ல காதலியை பார்க்க போய்... பாழும் ’கிணத்துல’ விழுந்த காதலன்...!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரவில் பார்ட்டி பண்ணிவிட்டு காதலியை பார்க்க சென்ற அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் வழி தெரியாமல் பாழும் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் வெங்கடபுரத்தை சேர்ந்த 22 வயத்தான ஜிலான் என்னும் இளைஞர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஜிலான் செல்போன் கடைக்கு வரும் அதேபகுதியை சேர்ந்த, பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதுவரை ரகசியமாக இருந்த காதல் கதை நேற்றிரவு ஜிலானின் செய்கையால் ஊர் மக்கள் முன் அம்பலமாகியுள்ளது.
நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் காதலியின் பக்கம் சென்றுள்ளார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் செல்போன் கடை திறக்காததால் தன் காதலியை பார்க்க முடியாமல் தவித்த ஜிலான் இன்றிரவு பார்க்கவேண்டும் என நினைத்து, காதலியின் வீட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால் இதனைப் பார்த்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து திருடன் என நினைத்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டவுடன் பதறிப்போன ஜிலான், அங்கிருந்து எகிறி குதித்து ஓடியுள்ளார். இருட்டில் கவனிக்காமல் சென்ற ஜிலான், கிணறு இருப்பது தெரியாமல், 75 அடி ஆழமுள்ள பராமரிக்கப்படாத கிணற்றில் விழுந்து வசமாக சிக்கிக்கொண்டார்.
கிணற்றில் தண்ணீர் ஏதும் இல்லாததால் கைகால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கிணற்றில் இருந்து மேலே எற உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார். காதலரின் சத்தம் கேட்ட ஜிலானின் காதலி மற்றும் அவரின் பெற்றோர் வந்து உயிருக்கு போராடிய அவரை மீட்க அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், ஜில்லானை கிணற்றில் இருந்து மீட்டு அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் ஜிலானின் உடலில் அதிகமான உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
