கள்ளக்காதலியை தேடி லாரி பிடிச்சு போனவருக்கு கொரோனா...! 'மனுஷன் மாசத்துக்கு மூணு தடவ பார்க்க போவாராம்...' தவியாய் தவித்த காதல் ரோமியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்கு தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சித்தூருக்கு பறக்க முயன்ற போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தள்ளியுள்ளனர் ஆந்திரா மாநில போலீசார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் வசிக்கும் 25 வயதான இளைஞர் ஒருவர் இந்த ஊரடங்கு காலத்தில் தனது கள்ளக்காதலியை சந்திக்க முடியாமல் தவித்துள்ளார். ஆம்பூரில் செருப்புக்கடை நடத்தி வரும் இவர் மாதத்திற்கு மூன்று முறை ஆந்திர மாநிலம், சித்துார் கிரிம்பேட்டையில் உள்ள கள்ளக்காதலியை பார்க்க சென்று வருவார்.
இந்திய முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தனது காதலியை பார்க்க முடியாமல் சோகத்தில் உறைந்த இவர் நெடுஞ்சாலைகளில் செல்லும் வண்டிகளில் பயணிக்க திட்டமிட்டுள்ளார்.
இதனால் ஆம்பூரிலிருந்து ஆந்திர மாநிலம், பலமனேரிக்கு காய்கறி லாரியில் சென்று, அங்கிருந்து, தனியார் பேட்டரி நிறுவன லாரியில், சித்துார் சென்றார். இளைஞர் சென்ற லாரியை, சித்துார் மாவட்ட சுகாதாரத் துறையினர் மடக்கியது. அதில் பயணித்த 20 பேருக்கு கொரோனா சோதனை செய்து அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர்.
பரிசோதனையின் முடிவில் காதல் ரோமியோவான நம்மூர் இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவரின் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அவர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர் பயணித்த அனைத்து வண்டிகளின் ஊழியர்களையும் சேர்ந்து சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கபட்டுள்ளது.