'கல்யாணமாகி 15 நாள் தான் ஆச்சு'... 'புது வாழ்க்கையை தொடங்க ஆசையா இருந்த இளைஞர்'... எதிர்பாக்காமல் நடந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யா காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி தமிழினி பிரபா. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதோடு திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய தமிழினி பிரபா, கடந்த 5ஆம் தேதி கோவையில் சுயமரியாதை காதல் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இந்த சூழ்நிலையில் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் எனக் காத்திருந்த கார்த்திகேயனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று பெண்ணின் தந்தை, தாய் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னையும் தன் தாயையும் தாக்கிவிட்டு மனைவியைக் கடத்தி சென்றதாக, கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கார்த்திகேயன் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. திருமணமாகி 15 நாட்களில் காதல் மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
