அதுக்கு 'காரணம்' நான் இல்ல.. ஆத்திரத்தில் காதலன் செய்த 'விபரீத' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 02, 2020 09:04 PM

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த கோதண்டபாணியின் மகள் லட்சுமி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

Lover did a rude things to his lover girl and arrested

லட்சுமி மற்றும் ராஜசேகரன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வரும் நிலையில் லட்சுமி ஒருமாத கர்ப்பமாகியுள்ளார். இந்த தகவலை தனது காதலர் ராஜசேகரனிடம் லட்சுமி தெரிவிக்க அதனை முற்றிலும் மறுத்த ராஜசேகரன் இதற்கு நான் காரணமில்லை என கூற இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கோபமடைந்த ராஜசேகரன், தனது காதலியான லட்சுமியின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டார். இந்த சம்பவத்தால் தீக்காயமடைந்த லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்த புகாரின் பெயரில் ராஜசேகரன் மீது போலீசார் கொலை முயற்சியின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.