'உங்க மருமகளை வரவேற்பதற்காக.. இன்னொருத்தரோட மகள கொன்னுருக்கீங்க!'... கொதித்தெழுந்த உயர்நீதிமன்றம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 15, 2019 12:31 PM

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள ரேடியல் சாலையில் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து மென்பொருளாளர் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. 

chennai HC condemns jayakopal who involved in subashree case

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஜெயகோபால் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் நடந்த விசாரணையில் உயர் நீதிமன்றம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது

அதன்படி, ‘உங்கள் மருமகளை வரவேற்க வேறு ஒருவரின் மகளை கொன்றுள்ளீர்கள்’ என்று ஜெயகோபாலுக்கு உயர்நீதிமன்றம் நேரடியாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து, அந்த பெண் உயிரிழந்த பிறகும், சரணடையாமல் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தது ஏன் என்றும் ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.