'சிறுமியை' முட்புதருக்குள் தூக்கிச் சென்ற இளைஞர்... ஆத்திரத்தில் குடியிருப்புகளை 'அடித்து நொறுக்கிய' பொதுமக்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 12, 2020 01:13 PM

செங்கல்பட்டு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை வடமாநில இளைஞர் முட்புதருக்குள் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A North indian who carrying a school girl to shrub

செங்கல்பட்டு மாவட்டம், முள்ளிப்பாக்கம் கூட்டுசாலை அருகே அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 200க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வழியே பள்ளி சென்று வரும் 10ம் வகுப்பு மாணவியை அவர்களில் சிலர் நோட்டம் விட்டு வந்துள்ளனர். நேற்று மாணவி அவ்வழியே நடந்து சென்ற போது வடமாநில இளைஞர் ஒருவர் மாணவியை வலுக்கட்டாயமாக முட்புதருக்குள் வாயை மூடி இழுத்துச் சென்றுள்ளார்.

சிறுமி சத்தமிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு சிறுமியை மீட்டனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளைஞரை கட்டுமானப் பகுதிக்கு வந்து தேடியுள்ளனர். அப்போது சில வடமாநில இளைஞர்கள் ஓடி ஒளிந்துள்ளனர். இதையடுத்து கட்டுமான தொழிலாளர் குடியிருப்புகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரோடு மேலும் இருவர் தலைமறைவாகி விட்டனர். இது சம்பந்தமாக 13 பேரை  அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #CHENGALPATTU #NORTHINDIAN #SHRUB #SCHOOL GIRL