தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் ரூ.2500 பணம்.. பெறுவதற்கான 'டோக்கன்' பற்றிய முக்கிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்று முதல் தொடங்கி தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத் தொகையை பெறுவதற்கான டோக்கன் வரும் 30ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து அரிசி மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் திருநாளைக் கொண்டாடும் விதமாக, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும், அத்துடன் சேர்த்து 2500 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை இது தொடர்பாக வெளியிட்ட சுற்றறிக்கையில், இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கென நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடுதோறும் சென்று டோக்கன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், முற்பகலில் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் நியாய விலைக் கடையில் பொங்கல் தொகுப்பு, பரிசுத் தொகை விநியோகிக்கப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் சில காரணங்களால் குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகையை வாங்கத் தவறுபவர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் அவை வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
