"உழந்தும் உழவே தலை!".. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெகிழ வைக்கும் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேசிய விவசாயிகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் , "உழந்தும் உழவே தலை.. உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
"உழந்தும் உழவே தலை"
உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த "தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். #farmersday pic.twitter.com/rTNdlpMOwm
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 23, 2020
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல இடங்களில், ‘முதலில் தாம் ஒரு விவசாயி, பிறகுதான் முதல்வர்’ என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வரப்போகும் பொங்கலை அடுத்து கரும்பு உள்ளிட்ட சிறப்பு பரிசு பொருட்களுடன் சேர்த்து 2500 ரூபாய் அறிவித்திருப்பதும், இந்த 2021-ஆம் ஆண்டின் பொங்கலுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டினை அனுமதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
