'சாதிவாரி கணக்கெடுப்பு'... முதலமைச்சர் 'எடப்பாடி பழனிசாமி'யின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சாதிவாரி புள்ளிவிவரங்களைச் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புள்ளிவிவரங்களைத்திரட்டி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குலசேகரன் தலைமையிலான ஆணையம் உடனே செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் பணி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 89% இட ஒதுக்கீடு வழக்கை எதிர்கொள்ளத் தேவையான புள்ளிவிவரத்தைப் பெற ஆணையம் ஏதுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பல்வேறு கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்த நிலையில் சாதிவாரி புள்ளிவிவரத்தைக் கணக்கெடுக்க ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.