'டிசம்பர் 7 ஆம் தேதி முதல்’... ‘இவங்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறப்பு’... ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
![Final year UG classes reopens from december 7 announced by TN GOVT Final year UG classes reopens from december 7 announced by TN GOVT](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/final-year-ug-classes-reopens-from-december-7-announced-by-tn-govt.jpeg)
ஏற்கனவே, முதுநிலை பொறியில், கலை, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட மாணவர்களுக்கு டிசம்பர் 2-ம் தேதி வகுப்புகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண் மீன்வளம் மற்றும் கால்நடை உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு இளங்கலை படிப்புகளை டிசம்பர் 7 முதல் மீண்டும் திறப்பதாக தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வெளி ஊர்களில் இருந்து மற்ற இடங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் இடம் பற்றிய கேள்வி எழும்பியது. கல்லூரிகளில் விடுதிகளின் வசதி இல்லாமல் அவர்கள் தங்குவது எங்கே? இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களை தங்க அனுமதிக்க விடுதிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் கல்லூரிகள் டிசம்பர் 7 முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய கல்வி ஆண்டு அதாவது, 2020-21 ஆம் ஆண்டிற்கான பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான துவக்கம் பிப்ரவரி 1 முதல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடுதிகள் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)