"இப்போ நடந்துட்டு இருக்குறத... பல வருஷத்துக்கு முன்னாடியே கணிச்சு சொன்ன 'பாட்டி'... '2021'ல இப்படி எல்லாம் நடக்குமாம்..." பாபா வங்காவின் அதிர்ச்சி 'கணிப்பு'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Dec 25, 2020 11:17 PM

2020 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தாண்டு என்பது உலக மக்களுக்கே மிகவும் மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்து விட்டது.

blind mystic baba vanga\'s predictions about 2021 is here

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் ஒரு வழி செய்து விட்டது. தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் பல நாடுகளில் குறைந்து வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவி வருவது அனைத்து நாட்டு மக்களை மீண்டும் கடுமையான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

2021 ஆம் ஆண்டாவது சிறப்பாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்த  பாபா வங்கா, 2021 ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பெண்மணி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் உயிரிழந்தார். 12 வயது வரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த பாபா வங்கா, அதன் பிறகு தனது பார்வை திறனில் குறைவு ஏற்பட்டு முற்றிலுமாக பார்வையை இழந்தார். இவர் இறப்பதற்கு முன்னரே வருங்காலம் குறித்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். blind mystic baba vanga's predictions about 2021 is here

அதில் பல சம்பவங்கள் உண்மையாக அதன்பிறகு நிகழ்ந்துள்ளது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் அமைந்துள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் என கூறியிருந்தார். அதே போல அந்த சம்பவம் நடந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அமெரிக்காவின் 44 - வது ஜனாதிபதியாக கருப்பினத்தவர் ஒருவர் பதவியேற்பார் என தெரிவித்திருந்தார். அதுவும் அப்படியே நடந்தது. இப்படி பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ள காரியங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை நிஜத்தில் நடந்துள்ளது.

blind mystic baba vanga's predictions about 2021 is here

இதனையடுத்து, இன்னும் சில தினங்களில் 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு குறித்தும் இனி வரும் காலங்களில் உலகம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் பாபா வங்கா சில விஷயங்களை கணித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கவிருப்பதாக அவர் கணித்துள்ளார். அதே போல, புற்று நோய்க்கான தீர்வு உருவாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 45 ஆவது அமெரிக்க அதிபர் (டொனால்ட் டிரம்ப்) மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும், அதனால் அவர்  காது கேட்காமலும், மூளை பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டு பாதிப்படைவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடையும் என்றும், ஐரோப்பாவில் தீவிரவாதிகள் ஏதேனும் சதி வேலைகளை செய்யக் கூடும் என்றும் அவர் கணித்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உயிருக்கு அச்சுறுத்தல் ஒன்று அவரது நாட்டிலிருந்தே வரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'அடுத்த 200 ஆண்டுகளில் மனிதர்கள் ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வர். இந்த உலகம் என்னும் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று அனைவரும் தெரிந்து கொள்வர். மக்கள் அனைவரும் வேறு உலகங்களிலுள்ள தங்களின் ஆன்மீக உடன்பிறப்புகளுடன் தொடர்பு கொள்வர்' என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என்றும், அதில் மூன்று ராட்சதர்கள் ஒன்று கூடுவர் என்றும், அதில் சில பேரிடம் சிவப்பு பணம் இருப்பதை தான் பார்ப்பதாகவும் கணித்து கூறியுள்ளார். பாபா வங்கா அடுத்த நூற்றாண்டு குறித்தும், வரவிருக்கும் ஆண்டுகள் குறித்தும் கணித்து கூறியுள்ளது தற்போது மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Blind mystic baba vanga's predictions about 2021 is here | World News.