'பொங்கல் பரிசாக ரூ 2500!!!'... 'யாருக்கெல்லாம் கிடைக்கும்?... எப்போதிருந்து வழங்கப்படும்???'... 'முதலமைச்சர் அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 2,500 வழங்கப்படுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்படும். 2021ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து, ஜனவரி மாதம் 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
அதோடு ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியுடன், ஒரு துண்டு கரும்புக்குப் பதிலாக முழு கரும்பு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வீடு வீடாக வந்து டோக்கன் கொடுக்கப்பட்டு, ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
